BREAKING NEWS

ரஜினிகாந்த் பட போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து அடுத்து ‘‘தர்பார்‘‘ படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு,மலையாலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளிவருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு பட போஸ்டரை முதலில் நடிகர் கமலஹாசன் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தெலுங்கில் அப்போஸ்டரை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி தெலுங்கு போஸ்டரை மகேஷ் பாபு வெளியிட்டார். தமிழ் போஸ்டரை கமலஹாசன் வெளியிட்டார். மலையாளப் போஸ்டரை மோகன்லாலும், இந்தி போஸ்டரை சல்மான்கானும் வெளியிட்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *