BREAKING NEWS

ரஜினிகாந்த்தின் படத்தை இயக்குகிறார், சிவா

அஜித் நடித்த‘ வீரம்‘,‘ வேதாளம்‘,‘ விவேகம்‘,‘ விஸ்வாசம்; ஆகிய படங்களை இயக்கியவர் சிவா.
விஸ்வாசம்‘ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிவா ரஜினியை சந்தித்தார். அப்போது ரஜினியிடம் இரு கதைகள் சொன்னதாகாவும் அதில் ஒரு கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும் அப்போது செய்திகள் வந்தன.
இந்நிலையில் ‘‘தர்பார்‘‘ படத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியை மீண்டும் சிவா சந்தித்து பேசியிருக்கிறார். ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.அப்போது சிவா சில திருத்தங்களுடன் அக்கதையை மீண்டும் சொல்லி இருக்கிறார்.
அதை கேட்டு ரஜினி நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எனவே ரஜினியின் அடுத்தப்படத்தை சிவா இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *