BREAKING NEWS

யூகோ வங்கி இழப்பு ரூ.633 கோடி.


 

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கிக்கு முதல் காலாண்டில் ரூ.633 கேடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் இழப்பு ரூ.663 கோடியே 02 லட்சமாக காணப்பட்டது. வருவாய் ரூ.4000 கோடியே 237 லட்சத்து 04 ஆயிரத்திலிருந்து உயர்ந்து ரூ.4000 கோடியே 360 லட்சத்து 88 ஆயிரமாக காணப்பட்டது.

ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 19.87 சதவீதத்திலிருந்து அதிகரித்து 25.71 சதவீதத்தை எட்டியுள்ளது. நிகர அளவிலான வாராக் கடன் 10.63 சதவீதத்திலிருந்து உயர்ந்து 12.74 சதவீதமாக காணப்பட்டது.

வாராக் கடன் அதிகரிப்பையடுத்து அதற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1000 கோடியே 204 லட்சத்து 25 ஆயிரத்திலிருந்து கணிசமாக உயர்ந்து ரூ.2000 கோடியே 38 லட்சத்து 33 ஆயிரமானது என யூகோ வங்கி செபி-க்கு தெரிவித்துள்ளது.




Leave a Reply