BREAKING NEWS

“யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை” நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பான பேச்சு.

 

 

டிரைலர் வெளியீட்டு விழா

நடிகர் சிவகார்த்திகேயன் டைரக்டர் பொன்ராமுடன் இணைந்து ஏற்கனவே ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் ‘‘ ‘‘ரஜினிமுருகன்‘‘ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 3 வது படமாக இருவரும் ‘‘சீமராஜா‘‘ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் இம்மாதம் வெளிவருகிறது. படத்தை 24 ஏ எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரித்துள்ளார்

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது . விழாவில் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சமந்தா, வில்லியாக நடித்துள்ள சிம்ரன் நகைச்சுவை நடிகர் சூரி, டைரக்டர் பொன்ராம், இசை அமைப்பாளர் டி. இமான், காமிராமென் பாலசுப்பிரமணியம், ஆர்ட் டைரக்டர் டி. முத்துராஜ், டான்ஸ் மாஸ்டர் சோபி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.,

போட்டியாக கருதவில்லை

விழாவில் சிவ கார்த்திகேயன் பேசியதாவது;-

நானும் பொன்ராமும் இணந்து ஏற்கனவே வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை கொடுத்து இருக்கிறோம் இரண்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. இது மூன்றாவது படம். அந்த இரு படங்களை விட இது மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை வர காரணம் படத்தின் கதை. அதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் வகையில் பொன்ராம் எடுத்து இருக்கிறார். டி. இமான் இசையில் வெளிவந்திருக்கும் பாடல்கள் இபோதே பிரபலம் ஆகி இருக்கின்றன.

இப்படத்திற்காக நடிகர் சூரி உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்து இருக்கிறார். இது பற்றி சூரியிடம் சொன்ன போது ‘‘ நானெல்லாம் சிக்ஸ் பேக் வச்சா நல்லா இருக்குமா? ரசிகர்கள் ரசிப்பாங்களா? என்று கேட்டார்.‘‘அதெல்லாம் ரசிப்பாங்க‘‘ என்றேன், ஏன்னா அந்த காலம் மாதிரி சினிமா இப்ப இல்லை. இவங்க தான் நடிக்க வரலாம்.இவங்கதான் நடிக்கனும் என்பதெல்லாம் மாறிப்போச்சு இப்ப யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாம்.எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம்..ஜனங்க ரசிக்கனும் அவ்வளவு தான். ஜனங்க ரசிச்சா அவன் நடிகன். நான் அப்படிதான் வந்தேன்.

யாருக்கும் நான் போட்டியில்லை. யாரையும் நான் போட்டியாகவும் கருதவில்லை .நான்பாட்டுக்கு படம் பண்ணி போயிட்டே இருக்கேன் நடிப்பது மட்டும் தான் என் வேலை.. அதில் தான் எனக்கு சந்தோஷம்.இதில் மற்றவர்களை பார்த்து பொறாமைபடவோ போட்டியாக கருதவோ எனக்கு நேரமில்லை

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.




Leave a Reply