BREAKING NEWS

மோடி ஆட்சியில் ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்ததுதான் சாதனை

மோடியின் 100 நாள் ஆட்சியில் ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்ததுதான் சாதனை என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இமானுவேல் சேகரனின் 62வது நினைவு நாளை முன்னிட்டு, நேற்று பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர். நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இமானுவேல் நினைவுநாள்

‘தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்’ என போராடியவர் இம்மானுவேல் சேகரன். அவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1950ம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தை கண்டவர் இம்மானுவேல். அதேபோல், 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி, தீண்டாமைக்கு எதிராக வாதிட்டவர். எனவே, அவருடைய புகழ் ஓங்கி நிலைத்திட வேண்டும்.

கேள்வி : இம்மானுவேல் நினைவு நாள் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசு விழாவாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அரசுப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி இது.

மோடியின் சாதனை

கேள்வி : பிரதமர் மோடி 100 நாள் சாதனை என்று எதை குறிப்பிடுவீர்கள்?

பதில் : பிரதமர் மோடி ஆட்சியின் சாதனையை சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்குலைவு சொல்லலாம். ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதுதான் மிகப்பெரிய சாதனை.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply