BREAKING NEWS

மொத்த மதிப்பெண்ணை விட அதிகமாக வழங்கிய பிகார் தேர்வு வாரியம் 35க்கு 38 மதிப்பெண் .

பீகாரி மாநிலத்தில் மொத்த மதிப்பெண்ணை விட கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு

தேர்வுகளின் போது காப்பி அடிப்பது, உறவினர்களே தேர்வு மையக் கட்டடத்தில் ஏறி பிட் எடுத்துக் கொடுப்பது போன்ற செய்திகளால் மிகவும் பிரபலமான பிகார் மாநிலம் இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு நல்ல விஷயத்துக்காக செய்தியானது.

அது தான் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வில் பிகார் மாணவி கல்பனா முதலிடம் பிடித்தார். அப்போதும் சில சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்த பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என்றும், வருகைப் பதிவு மிகக் குறைவாக இருந்த நிலையிலும் அவர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற சர்ச்சையும் எழுந்தது.

இந்த நிலையில், பிகார் பள்ளிக் கல்வித் துறை நடத்திய பிளஸ் 2 வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, 35 மதிப்பெண்ணுக்கான கணிதத் தேர்வை எழுதியிருந்த நிலையில், தங்களுக்கு கணிதப் பாடத்தில் 38 மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ச்சி

பிறகு சுதாரித்துக் கொண்டு, ஏற்கனவே பிகார் மாநில பொதுத் தேர்வுகளில் இதுபோல பல முறை நடந்திருப்பதை நினைவு கூர்ந்துள்ளார். பிகாரில் இதெல்லாம் சகஜமப்பா என்று அப்படியே விட்டுவிட்டார்.சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கும் இயற்பியல் பாடத்துக்கு 35க்கு 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. ராகுல் குமார் கணிதப் பாடத்தில் 35க்கு 40 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இவர்களையெல்லாம் விட ஜான்வி சிங் என்ற மாணவியின் கதை இன்னும் விசித்திரமாக உள்ளது. நான் பயாலாஜி தேர்வுக்கு செல்லவேயில்லை. என்றாலும், எனக்க பயாலஜி பாடத்தில் 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல, சத்யா குமாருக்கும், தான் தேர்வெழுதாத பாடங்களுக்கும் தனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தோடு விவரிக்கிறார்.

விமர்சனம்

2016ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ரூபி ராய், தான் படித்த பொலிடிகல் சயின்ஸ் என்ற பாடத்தின் பெயரைக் கூட சரியாக சொல்லத் தெரியாமல், புரோடிகல் சயின்ஸ் என்றும், அதில் சமையல் பற்றி சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் தவறாகக் கூறியது ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து, பிகார் கல்வித் துறை மீது கடும் விமரிசனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் பங்கேற்ற பிகார் மாணவர்கள் 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவர்களாக உள்ளனர். இவர்களில் பலர் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயிலவும் வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2 வகுப்பில் கடுமையாக படித்து 1200க்கு 1100க்கு மேல் மதிப்பெண் எடுத்த அனிதாவுக்கும், பிரதீபாவுக்கும் கிடைக்காத மருத்துவ மாணவர் சேர்க்கை இடம், இவர்களுக்கு கிடைக்கப் போகிறது அல்லவா?




Leave a Reply