BREAKING NEWS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

 

 

 

கனமழை

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் மொத்தம் வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

வெள்ளக்காடு

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆறு, மெயின் அருவி, ஐந்தருவி, பெரியபாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தொடர்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

எச்சரிக்கை

இதன் காரணமாக 9 வது நாளாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 100 அடியை எட்டுவது இது 64வது முறையாகும்.

கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி மேட்டூர் அணை 100 அடியை எட்டியிருந்தது.




Leave a Reply