BREAKING NEWS

மேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை கண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தன்னிச்சையான முடிவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கர்நாடக அரசு இந்த மாதத்திற்கு தமிழகத்துக்கு மட்டும் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். இச்சூழலில், கர்நாடக முதல்வர் தன்னிச்சையாக மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது நியாயமில்லை.

கண்டிக்க வேண்டும்

தண்ணீர் பங்கீட்டிலும், அணைக்கட்டுவதிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட முடியாது. மேகதாது குறித்த கர்நாடக அரசின் அறிவிப்பை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்திற்கும், மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்றுக் குழுவிற்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்பதை மத்திய அரசு அழுத்ததோடு கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply