BREAKING NEWS

மெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;

மெட்ரோ ரெயில் 4-வது வழித்தடப்பாதை ஆயிரம் விளக்கு- கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர்.

சுரங்கப்பாதை

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிவரை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 107 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழு

இதில் 4-வது வழித்தட பாதை ஆயிரம்விளக்கு- மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 12 சுரங்க ரெயில் நிலையங்கள் உருவாக்கப்படுகிறது.

இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 6 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும்.

ெடெண்டர்

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதில் 4-வது வழித்தடப்பாதை ஆயிரம் விளக்கு- கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும். 6 ஆண்டுகளில் பணிகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply