BREAKING NEWS

மெக்ஸிகோ – அமெரிக்க எல்லையில் சுவர்

மெக்ஸிகோ – அமெரிக்கா இடையே சுவர் எழுப்புவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மெக்ஸிகோ – அமெரிக்கா இடையே சுவர் எழுப்ப ஐந்து நீதிபதிகள் தலைமையிலான அமர்வு அதிபர் ட்ரம்ப்புக்கு சாதகமான தீர்ப்பை வெள்ளிக்கிழமை வழங்கினர். மேலும் அமெரிக்கா – மெக்ஸிகோ இடையே அமைக்கப்படும் எல்லைச் சுவருக்குத் தேவையான நிதியைப் பெற பாதுகாப்பு அமைச்சகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும் வரவேற்பைத் தெரிவித்த்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லைச் சுவர் தொடர்பாக மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் தென்பகுதியில் சுவர் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.

ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக சுவர் எழுப்புவதில் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சுவர் எழுப்புவதற்கு நீதிமன்றத்தை நாடிய ட்ரம்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply