BREAKING NEWS

மூன்று கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720X1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, வி.ஜி.ஏ. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 4 சிறப்பம்சங்கள்:

6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720X1600 பிக்சல் டிஸ்ப்ளே

மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர்

3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

13 எம்.பி. பிரைமரி கேமரா

2 எம்.பி. இரண்டாவது கேமரா

வி.ஜி.ஏ. கேமரா

8 எம்.பி. செல்பி கேமரா

ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஹை ஒ.எஸ்.

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

10 வாட் சார்ஜிங்

டூயல் சிம் ஸ்லாட்

ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, வைபை

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.7,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *