BREAKING NEWS

மு.க.ஸ்டாலின்,தி.மு.க. தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் – பொதுக்குழு கூட்டத்தில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 


சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். துரைமுருகன் பொருளாளராக தேர்வாக உள்ளார். இதனால், தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கருணாநிதி மரணம்

தி.மு.க. தலைவராக கருணாநிதி, கடந்த 50 ஆண்டுகாலமாக பதவிவகித்தார். இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு அவரது உடல்நிலை காரணமாக, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திலே ஓய்வு பெற்று வந்தார். இதனால், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின், செயல்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைவர் பதவி

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து, தி.மு.க.வில் தலைவர் பதவி காலியானது. இதனால், புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலினே அடுத்த தலைவர் என்று முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பேசினார்.

ஸ்டாலின் வேட்புமனு

இந்த நிலையில், கட்சியின் ெபாதுக்குழு கூட்டம் வரும் 28-ந் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். மேலும், இந்தக் கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தாக்கல் செய்தார்.

அவரை கட்சியின் 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்தனர். ேமலும், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு எவரும் மனு தாக்கல் செய்யவில்ைல. இதனால், இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில், வேட்புமனுவை திரும்பபெறும் நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில், தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், அதிகாரப்பூர்வ தலைவராக அறிவிக்கப்பட உள்ளார். ேமலும், பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த துரைமுருகனும் அதிகாரப்பூர்வமாக பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

தொண்டர்கள் உற்சாகம்

மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுவதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் ேபாலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




Leave a Reply