BREAKING NEWS

முழு சந்திரகிரகணம் நள்ளிரவில் நிகழ்ந்தது. நிலா ரத்த நிறத்தில் ஜொலித்தது, 103 நிமிடம் வரை நீடித்தது. இதை லட்சகணக்கானோர் பார்த்தனர். கிரகணம் முடிவடைந்த பிறகு புனித நதிகளில் நீராடினர்.

 

ரத்த நிறம்

கடந்த வெள்ளி முழு சந்திர கிரகணம் ஏற்ப்பட்டது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்கி 103 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்து. அதிகாலை 2.43 மணிக்கு பூரண சந்திரகிரகணம் முடிந்தது. அப்போது ரத்த நிறத்தில் ஜொலித்தது.

மிக நீளமானது

முன்னதாக இந்த சந்திரகிரகணம் கடந்த வெள்ளி இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்கியது. இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

மேலும் புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்ந்ததுள்ளது.

அடுத்த கிரகணம்

இதே போன்ற அடுத்த நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி நிகழும், அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.

பார்க்க ஏற்பாடுகள்

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முழு சந்திர கிரகணத்தை நேரடையாகவும், தொலைனோக்கிகள் மூலமாகவும் பார்க்க சென்னை, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல நாடுகளில்

சந்திர கிரகணம் தென் அமேரிக்க, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளாளை சேர்ந்தவர்கள் கண்டு ரசித்தனர்.

நதிகளில் நீராடுதல்

சந்திர கிரகணம் முடிவடைந்த பிறகு கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதவரி, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட புனித நதிகளில் ஏராளமானோர் நீராடினார்கள்.




Leave a Reply