BREAKING NEWS

முறையாக பராமரிக்காத மாநகராட்சி குளங்களை  ரூ.2 கோடி செலவில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை.


வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 20 குளங்களை முறையாக புனரமைக்க 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

நகரத்தின் நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியில் நகரத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் மிக முக்கியமானவை. பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட இடங்களில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் 20க்கும் மேற்பட்ட குளங்கள் பராமரிப்பு இல்லாமலும் பயன்பாடு இல்லாமலும் உள்ளன.

மாநகராட்சி நடவடிக்கை

மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் உள்ள குளங்களை முறையாக புனரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிலத்தடிநீர் உயர வாய்ப்பு

அதன்படி, மூன்று மண்டலங்களில் உள்ள குளங்களை குறைந்தபட்சம் ஒரு கோடி முதல், அதிகபட்சம் 2 கோடி ரூபாய்க்கு புனரமைக்க தனியாரிடம் இருந்து ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும், பராமரிப்பு இல்லாத குளங்களை முறையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கலாம்.




Leave a Reply