BREAKING NEWS

முரசொலி அலுவலகம் தொடர்பான ஆதாரங்களை உரிய நேரத்தில் ஆணையத்திடம் வழங்குவேன்

முரசொலி அலுவலகம் தொடர்பான ஆதாரங்களை உரிய நேரத்தில் ஆணையத்திடம் வழங்குவேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முரசொலி அலுவலகம் ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்று ஆராய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர். அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே தி.மு.க. மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்று ஆளாய்ப் பறக்கின்றனர்.

அவ்வழியில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக தொடர்ச்சியான அவதூறு. முதலில், ராமதாசு முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்று குறிப்பிட்டார். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும், அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன்பின் அங்கிருந்து பதிலில்லை. ஆதாரங்கள்மீண்டும் மூலப் பத்திரத்தினைக் காட்டவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார்.

பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும். முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம். ஆணையத்திடம் வழங்குவேன்பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, முதல்வர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று கூறினார்.

அரசு நிர்வாகத்தில்தான் என்ன ஒரு வேகம். செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும் பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. முரசொலி மீது அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல, எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள். முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *