BREAKING NEWS

டைட்டில் ஸ்பான்ஸரை கைப்பற்றியது `மைடீம் 11′

உலக கோப்பை போட்டிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடன் தனது தொடரை தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டித் தொடருக்கான டைட்டில் ஸ்பான்ஸர் உரிமையை இந்தியாவின் முன்னணி இணையதள விளையாட்டு நிறுவனமான மை டீம் 11 கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மைடீம் 11 சர்வதேச தொடர் என்று அழைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply