BREAKING NEWS

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

 

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

கமல் கூட்டிய கூட்டத்தை புறக்கணித்த ரஜினி

காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். ஆனால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 9 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழரசன், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், தெய்வ சிகாமணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. தீர்மானங்களை வாசித்த கமல்ஹாசன் வருங்காலங்களில் பிரச்சனையை உணர்ந்து அனைத்து கட்சியினரும் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். ரஜினிகாந்த் இன்னும் கட்சி அறிவிக்கவில்லை அதனால் எப்படி கலந்துகொள்வது என்று கருதினார். ஆனால், அவர் கலந்து கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து என்று கூறினார்.

போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா

குலேபகாவலி படத்தை தொடர்ந்து, போக்கிரி, வில்லு படங்களில் தன்னிடம் பணியாற்றிய முகில் என்பவர் இயக்கும் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்ததில்லை. இந்த நிலையில் முகில் இயக்கும் படத்தில் முதன் முன்றையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் டிக் டிக் டிக் படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.

விரைவில் வெள்ளித்திரையில் சர்வர் சுந்தரம்

சக்க போடு போடு ராஜா படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகவிருக்கும் படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ளார். பொறியியல் துறையில் சாதிக்க துடிக்கும் சந்தானம் ஹோட்டலில் சர்வர் வேலை செய்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யங்களை மையப்படுத்தி சர்வர் சுந்தரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வேலைகள் கடந்த ஆண்டே முடிந்து ரிலீஸூக்கு தயரானது. ஆனால் ஒரு சில காரணங்களால் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்த நிலையில ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வர் சுந்தர படத்தை வெளியிடுக்கின்றனர். சர்வர் சுந்தரம் படம் வரும் ஜூன் 6ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அரசியல்வாதியாகும் ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி அரசியலுக்கு வருக்கிறார் என்று சமீபத்தில் சென்னையில் போஸ்டர்களும் விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன. அதை தொடர்ந்து கட்சி கொடியையும் தன்னுடைய டிவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் டி.பியாக வைத்தார். இதனால் ஆர்.ஜே பாலாஜி அரசியலில் களம் புகுவது உறுதி என்று சிலர் பேச தொடங்கினர். ஆனால் அது ஒரு படத்திற்கான புரமோஷனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காமெடியனாக நடித்துவந்த ஆர்.ஜே பாலாஜி முதன் முறையாக எல்.கே.ஜி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில்தான் ஆர்.ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார்.

பட புரோமஷனுக்காக நடனம் ஆடிய யுவன்சங்கர் ராஜா

அறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவினயம் இயக்கும் படம் பேய் பசி. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். த்ரில்லர் வகையில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆனால் கதைக்கு பாடல் காட்சிகள் தேவையில்லை என்பதால் பின்னணி இசையில் மட்டும் யுவன் கவனம் செலுத்துக்கிறார். இருந்தாலும் படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அந்த பாடலுக்கு இசையமைத்து பாடியதோடு, நடனமாடியும் கொடுத்துள்ளார் யுவன்சங்கர் ராஜா.

சரித்திர பின்னணியில்சன்னி லியோன்

சரித்திர நாயகியாக சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தை தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கிய வி.சி. வடிவுடையான் என்பவர் இயக்குகிறார்.

வீரமாதேவி படத்துக்காக சென்னைக்கு அருகில் அரங்கம் அமைத்து சூட்டிங்கை நடத்திவருகின்றனர். சரித்திர பின்னணியில் உருவாகும் கதை என்பதால் பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சன்னி லியோன் நடித்துவருகிறார்.

அதிலும் குதிரை சண்டை காட்சிகள் அதிகமாகவுள்ளதகவும் அதற்காக தனி பயிற்சி எடுத்துக்கொண்டார் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு வீரப் பெண்ணின் கதையென்றும், 100 கோடியில் வீரமாதேவி படம் எடுக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். இதில் 40 கோடி ரூபாய் கிராபிக்ஸ் பணிகளுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாம். வீரமா தேவி படத்தின் பஸ்ட் லுக் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் அஜித்

அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைப்பெற்று வருகிறது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த செய்தியை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், தற்போது அஜித் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்றும், அதில் ஒரு கதாபாத்திரம் வயதானது என்றும், இன்னொன்று இளமையான ரோல் என்று கூறப்படுகிறது. அஜித் இரண்டு ரோல்களில் நடித்த படங்களில் அசல் படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாம் வெற்றியடைந்துள்ளன.

அதர்வா நடிப்பில் 100

அதர்வா நடிப்பில் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படம் செம போத ஆகாத. மது போதையில் இருக்கும் அதர்வா ஒரு பிரச்ச்னையில் மாட்டிக்கொள்கிறார். அதனால் என்ன விளைவுகளை சந்திக்கிறார் என்பது இந்த படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

செம போத ஆகாத படத்தை தொடர்ந்து இமைக்கா நாடுகள், ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அதர்வா. இதனால் போலீஸை குறிக்கும் 100 என்ற எண் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நூறு படத்தில் முதன் முறையாக ஹன்சிகாவுடன் கூட்டணி சேர்கிறார்.
Leave a Reply