BREAKING NEWS

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஆப்கானிஸ்தான்.

வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையேயான நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

122 ரன்னில் சுருண்ட வங்கதேசம்

முகமது ‌ஷசாத் 40 ரன்னும், சமினுல்லா 18 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.பின்னர் ஆடிய வங்காள தேசம் 19 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் லிட்டன்தாஸ் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். நட்சத்திர வீரர் ரஷீத்கான் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதே போல ‌ஷபூர் சர்தான் 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.




Leave a Reply