தற்போதைய செய்திகள்

முதல்-அமைச்சர், துணை-முதல்வர், அமைச்சர்கள் கருப்பு சட்டை அணித்து அமைதி பேரணி….

சென்னை, டிச.6-
மறைந்த முதல்மைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக சென்று அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். லட்சோப லட்சம் தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயலலிதா மறைவு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்து நேற்றுடன் ஓராண்டு ஆகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–-ந் தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்.- அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்களால் அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது. முன்னதாக காலையில் இருந்தே வெளி ஊர்கலளில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.

அமைதி பேரணி

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து லட்சக்கணக்கான அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜா ரோடு, விருந்தினர் மாளிகை வழியாக சென்று மெரினா கடற்கரையை அடைந்தது. இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கான பேர் கறுப்பு சட்டையும், பேட்ஜ்யும் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா சமாதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

உறுதிமொழி ஏற்பு

அண்ணாசாலை முதல் எழிலகம் வரையிலும் கடற்கரை சாலை பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். சமாதியின் முன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்தமேடையில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அ.திமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Leave a Reply