BREAKING NEWS

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்து

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மக்களின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஓணம் வாழ்த்து

மலையாள மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிய திருமால், ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

 

ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும், மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புதிய ஆடைகளை உடுத்தி, குடும்பத்தினருடன் ஓணம் விருந்துண்டு, ஆடல், பாடல், விளையாட்டு என்று மனமகிழ்வோடு மலையாள மக்கள் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

இந்த இனிய நாளில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply