BREAKING NEWS

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளிநாடு செல்கிறார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்காகவும், தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பதற்காகவும் 14 நாள் சுற்றுப்பயணமாக நாளை வெளிநாடு செல்ல உள்ளார்.

தொழில் முதலீடு

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாட்டை முதன்முதலில் தொடங்கினார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் இந்தாண்டு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. இந்த நிலையில், தொழில் முன்னேற்றத்திற்காக பல்வேறு தொழில் முனைவோர்களை சந்திப்பதற்காகவும், அயல்நாடுகளில் மருத்துவம், உள்கட்டமைப்பு மற்றும் கல்வியில் மேற்கொண்டு வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நேரில் ஆய்வு செய்து அதை தமிழகத்தில் செயல்படுத்தவும் தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வந்தது.

முதல்வர் வெளிநாடு பயணம்

இதற்காக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜெர்மன் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டார். இந்த நிலையில், தொழில்நுட்ப ஆய்வு மற்றும் முதலீட்டாளர்களின் சந்திப்பிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாடு செல்ல உள்ளார். அவரது பயண விவரம் நேற்று முன்தினம் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக இங்கிலாந்து செல்கிறார்.

அங்கு சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு கையொப்பம் இடுகிறார். பின்னர், ஆம்புலன்ஸ் சேவையையும் மேற்பார்வையிடுகிறார். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், பின்னர் அந்த நாட்டு எம்.பி.களை சந்திக்கிறார். பின்னர், 2-ந் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் செல்கிறார். பின்னர், அங்கிருந்து 7-ந் தேதி புறப்படும் முதல்வர், 8 மற்றும் 9-ந் தேதிகளில் துபாயில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 10-ந் தேதி சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின்போது அரசு அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.




Leave a Reply