BREAKING NEWS

முதன்முறையாக இந்தியாவிற்கு வரும்  குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்.

 

 

முன்னாள் குத்து சண்டை வீரரான மைக் டைசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

ரோல்மாடல்

களத்தில் இவரைக் கண்டு அஞ்சாத எதிரிகளே இல்லை. இவரை ரோல் மாடலாக கொண்டு குத்து சண்டையில் இந்திய வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர். பார்வையிலியே எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கும் அசாத்திய வீரர் டைசன் முதன்முறையாக மும்பைக்கு வருகை தருகிறார்.

வருகிற 29-ந் தேதி

இந்திய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பாலும், உலக கிக்பாக்சிங் கூட்டமைப்பாலும் ஆதரிக்கப்பட்ட லீக் தொடர் மும்பையில் வரும் 29-ந் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக மைக் டைசன் முதன்முறையாக இந்தியா வருகிறார். ஆனால் இந்த தொடரில் டைசன் பங்கேற்று விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைசனின் வருகையை பற்றி அறிந்த தீவிர ரசிகர்கள் அவரின் வருகையை கொண்டாட துவக்கி விட்டனர்.




Leave a Reply