மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி

தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் தருகிறார்கள் நடிகர் அருண் விஜய்யும் இயக்குனர் அறிவழகனும்.
இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘‘குற்றம் 23‘‘ என்ற படத்தை தந்து இருந்தனர். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் தர முடிவு செய்துள்ளனர் இப்படத்தை . ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ பட நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் அறிவழகன் கூறுகையில்,, “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய்யை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. இப்படம் தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ‘ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்‘ கதையாகும்.. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.
‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்த ராஜ சேகர் ஒளிப்பதிவை கவனிக்க சாம் சி.எஸ் இசை அமைக்க, கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் பணியாற்றுகிறார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *