BREAKING NEWS

மின்கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவை முற்றிலும் கைவிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்கட்டண உயர்வு

மின் இணைப்புக் கட்டணம், பிணை வைப்புத்தொகை, மின் அளவீட்டு கருவியின் வாடகை, மறு இணைப்பு கட்டணம் மற்றும் மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

கட்டண உயர்வு ரூ.1600 முதல் ரூ.6000-ம் வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய கட்டண விலை உயர்த்துவது பொது மக்களை மிகப்பெருமளவு பாதிக்கும்.

கைவிட வேண்டும்

பொருளாதார மந்த நிலை, தொழில்கள் மூடல், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு, அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் பொது மக்களுக்கு, மேலும் சுமையை அதிகரிக்கும் வண்ணம் மின் கட்டணங்களை உயர்த்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். எனவே, மின் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திட உத்தேசித்துள்ளதை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு தனது சொந்த விருப்பங்களையும், எதிர் விளைவுகளை உருவாக்கும் கொள்கைகளையும், நாட்டு மக்களின் மீது திணித்துவிட பல்வேறு நிர்ப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பகவத்கீதை படித்திட வேண்டும் என்பதாகும்.

பகவத் கீதை கூடாது

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளது. காலம், காலமாக போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் மதச்சார்பின்மை என்ற உயரிய கொள்கையை சீர்குலைத்து, ஒரு நாடு, ஒரு மதம் என்ற வகுப்புவாத மதவெறியூட்டும் கொள்கையை அமுல்படுத்தி, குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணியக் கூடாது, பகவத் கீதை புகுத்தப்படுவது கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *