BREAKING NEWS

“மிடில் ஆர்டர் பேட்டிங்கை குறை கூறுவது சரியில்லை”

மிடில் ஆர்டர் பேட்டிங்கை கடுமையாக குறை கூறுவது சரியானதில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மே.இ.தீவுகள் தொடரில் பங்கேற்பதற்காக புறப்பட்டு செல்லும் முன்பு அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பை தோல்வி என்பது மோசமானதாகும், இந்திய அணியில் முதல் மூன்று தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகின்றனர் என்ற பெயர் உள்ளது. தொடக்க வரிசை சிறப்பாக ஆடும் போது மிடில் ஆர்டர் வீரர்களுக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை.
தொடக்க வரிசை வீரர்கள் சோபிக்காத போது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆடும் சூழல் உருவாகிறது. நான் கூட மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தால் இதே நிலை தான் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டும். இன்னும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் செயல்பாடுகளை வைத்து மிடில் ஆர்டர் பேட்டிங்கை குறை கூறுவது சரியானதில்லை.

மிடில் ஆர்டர் வீரர்களுக்கு பேட்டிங் செய்ய அரிதாகவே வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு கிடைத்தால் சில நெருக்கடியான நேரங்களில் அவர்கள் சிறப்பாக ஆட அழுத்தம் உண்டாகிறது. நிலையாக வழக்கமாக ஆடும் வீரர்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம். சில வீரர்கள் இதற்காக தேர்வு செய்யபப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய ஆதரவை நாம் தர வேண்டும் என்றார்.




Leave a Reply