BREAKING NEWS

மாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு

மத்திய மந்திரிசபையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம், இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவுடன் மேலும் 3 மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய மந்திரிசபையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தார்.

‘தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட பகுதியாக இருந்தாலும் மக்கள்தொகை நெருக்கம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

எனவே, இனி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்படும். லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் செயல்படும்’ என அமித் ஷா குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து ்அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக , பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா , உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக எம்.பி. நவநீத கிருஶ்ணன், மத்திய அசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர்பேசுகையில், ” 370 அரசியல் பிரிவு தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்டதுதான்” என குறிப்பிட்டார்.

மக்களவையில் காஶ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியைசேர்ந்த இரு எம்.பி.க்கள் இந்திய அரசியல் சட்ட நகலை, சபையில் கிழிக்க முயற்சித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் சபையை விட்டு, சபைத்தலைவர் வெளியேற்றினார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்்புக்கு பிறகு, இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைகிறது. யூனியல் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயருகிறது.

இன்றைய மக்களவை கூட்ட நிகழ்வு அறிவிப்புகளால், காஶ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கை கடைபிடிக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதமும் அனுப்பி இருக்கிறது.




Leave a Reply