BREAKING NEWS

மாநகர பஸ்களில் 10 ஆயிரம் பயணிகள் ஓசி பயணம்

மாநகர பஸ்களில் கடந்த 3 மாதத்தில் மொத்தம் 10,791 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்பாது டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகிறார்கள். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அதிக பட்சமாக ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் டிக்கெட் இல்லாமல் கடந்த மே மாதத்தில் 3,3915 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 850 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் 3,658 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டன.

ஜூலை மாதத்தில் ஓசி பயணம் செய்த 3,218 பேரிடம் இருந்து அபராதமாக 5 லட்சத்து 55 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது.

3 மாதத்தில் மொத்தம் 10,791 பேர் மாநகர பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply