BREAKING NEWS

மழைநீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் – முதல்வர் அறிவிப்பு.


மழைநீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ.1000 கோடியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சேலத்தில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஓடைகள், நதிகளின் வழியாக ஓடுகின்ற நீர் பருவமழை காலங்களில் அதிகமாக மழை பொழிகின்றபொழுது கிடைக்கின்ற நீர் கடலிலே கலப்பதைத் தடுப்பதற்கு எந்தெந்த பகுதிகளில் தடுப்பணை கட்டலாம் என்பதை ஆராய்ந்து, ஆய்வு செய்து தடுப்பணை கட்டுவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கி, மூன்றாண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டங்களை நிறைவேற்றுகின்றபொழுது, பொழிகின்ற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பார்த்துக்கொள்ளும் நிலையிலே அரசு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Leave a Reply