BREAKING NEWS

மருத்துவமனையில் இருந்து தா.பாண்டியன் வீடு திரும்பினார்


 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இவருக்கு, கடந்த சனிக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்ேவறு தலைவர்களும் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.




Leave a Reply