BREAKING NEWS

மராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.

 

மராட்டிய மாநிலம் நாஷிக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட முதல் நாளில், தடையை மீறிய 72 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் பைக்கு தடை

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் பட்டியலில் ‘‘பாலி தீன் பை’’ முதல் இடத்தில் இருக்கிறது. ‘‘கேரி பேக்’’ என்று அழைக்கப்படும் பாலிதீன் பைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. பாலிதீன் பைகளை பயன்படுத்திய பிறகு அவை குப்பையில் வீசி எறியப்படுகின்றன.

மண்ணோடு மண்ணாக மக்காத இந்த பாலிதீன் பைகள் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன. தாவரங்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. அனைத்து வகை உயிரினங்களுக்கும் இது எமனாக மாறியுள்ளது. சுட, சுட பாலிதீன் பைகளில் கட்டி கொடுக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் உருவாகும் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே பிளாஸ்டிக், பாலிதீன்களை ஒழிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மராட்டியத்தில் அமல்

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் நேற்று முதல் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் முதல் கடைக்காரர்களும், பொது மக்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரூ.3½ லட்சம் வசூல்

பாலின்தீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் ஏராளமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மார்க்கெட்டுகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கடைகள், நடைபாதை கடைகள், கடற்கரை போன்ற இடங்களை கண்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட முதல் நாளே, நாஷிக் மாவட்டத்தில், தடையை மீறி பயன்படுத்துவர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை துவங்கியது. நாஷிக்கில், ஆறு முனிஷிபல் டிவிசன்களிலும் சேர்த்து மொத்தம் 72 பேர் தடையை மீறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறியவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராத தொகை மொத்தம் ரூ.3.6 லட்சம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

—–




Leave a Reply