BREAKING NEWS

மன்மோகன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமானவர் மன்மோகன் சிங். அவரது 88வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்திலும் அரசியலிலும், அவரது தலைமைத்துவப் பண்புகளால், நமது நாடு தொடர்ந்து பலனடைந்து வருகிறது. இந்நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அவர், இன்னும் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வேண்டும் எனும் எனது விழைவினையும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *