BREAKING NEWS

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊழல்களுக்கு துணை போன துணைவேந்தரை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

உயர் கல்வி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே உயர்கல்வி வளர்ச்சியைவிட ஊழல் வளர்ச்சி தான் மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக க.பாஸ்கரன் நியமிக்கப்பட்ட பிறகு காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்றொரு அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுத் துறையில் உபரியாக நிதி இருக்கும் நிலையில், தேவையின்றி தேர்வுக் கட்டணங்களை உரிய அனுமதியின்றி துணைவேந்தர் உயர்த்தினார்.

குற்றச்சாட்டு

தேர்வுக்கான விடைத்தாள்கள் கொள்முதல் உள்ளிட்ட விஷயங்களில் பெருமளவில் ஊழல் செய்யவே தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

துணைவேந்தராக பதவி வகிக்க தகுதியில்லாத முனைவர் பாஸ்கரனை பல்கலைக்கழக வேந்தரும் ஆளுனருமான பன்வாரிலால் புரோகித் உடனடியாக பதவி நீக்க வேண்டும். அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தை கல்வியாளர்கள் குழுவைக் கொண்டு நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply