தற்போதைய செய்திகள்

மத்திய அரசுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி:ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா. முடிவு கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தொடர்ந்து மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அந்த கட்சியின் தலைவர் ஜெகனமோகன் ரெட்டி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது-

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சிறப்பு நிதித் தொகுப்பு வழங்கும் விவகாரம் தொடர்பாக அந்தமாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வருகின்றன.

4 கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்

முதலாவதாக தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அமைச்சரவையில் இருந்தும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகியது. பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
ஆனால் நாடாளுமன்றத்தை பல்வேறு கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முடக்கி வருவதால் இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதற்கிடையில், விடுமுறை தினங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வருகிற செவ்வாய்கிழமை மீண்டும் கூடுகிறது. அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 3 கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.கருணாகரன் நேற்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்திருக்கிறார்.
ராஜினாமா முடிவு

நாடாளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 5-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்குள்ளாக ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இல்லையெனில் தங்கள் கட்சி எம்பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அந்த கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி
தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டத்தில் தனது கட்சி எம்பிக்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இல்லையென்றால் கடைசி நாளன்று ஒய்எஸ்ஆர் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள். பாஜக- உடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது. வருகிற தேர்தல்களை நாங்கள் தனித்து சந்திக்க தயாராக உள்ளோம். இருப்பினும் இடதுசாரிகளுக்கு எங்கள் அழைப்பு எப்போதும் உண்டு. இவ்விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதன்மூலம் மத்திய பாஜக அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply