BREAKING NEWS

மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,786 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.



 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.25000 கோடியே 470 லட்சத்து 86 ஆயிரமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.21000 கோடியே 774 லட்சத்து 42 ஆயிரத்துடன் ஒப்பிடும்போது இது 17 சதவீதம் அதிகமாகும்.

வருவாய் அதிகரித்த அதேவேளையில் நிறுவனத்தின் செலவினமும் ரூ.17000 கோடியே 837 லட்சத்து 17 ஆயிரத்திலிருந்து அதிகரித்து ரூ.19000 கோடியே 383 லட்சத்து 99 ஆயிரமானது. நிகர லாபம் ரூ.2000 கோடியே 350 லட்சத்து 78 ஆயிரத்திலிருந்து 61 சதவீதம் உயர்ந்து ரூ.3000 கோடியே 786 லட்சத்து 44 ஆயிரமாக காணப்பட்டது.

இலக்கு நிர்ணயம்

இக்காலாண்டில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 13.68 கோடி டன்னாக இருந்தது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. நடப்பு 2018-19 நிதி ஆண்டில் 63 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.




Leave a Reply