தற்போதைய செய்திகள்

மக்கள் இருக்கும் தைரியத்தில் அரசியலுக்கு வந்தேன் அவிநாசியில் நடிகர் கமலஹாசன் பேச்சு…

திருப்பூர்,
மக்கள் இருக்கும் தைரியத்தில் அரசியலுக்கு வந்தேன் என்று அவினாசியில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறினார்.
திறந்த வேனில் கமல்ஹாசன்
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டிந்தார். அதன்படி, அவிநாசி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடியே பேசினார்.
அப்போது கமல்ஹாசன் கூறியதாவது:-
மக்கள் இருக்கும் தைரியத்தில்
எந்த தைரியத்தில், நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள் என்று எல்லோரும் என்னைப்பார்த்து கேட்கிறவர்களுக்கும்
கேட்க போகிறவர்களுக்கும், நான் சொல்லக் கூடிய ஒரே பதில், இங்கு பெருந்திரளாக கூடியிருக்கும் பொதுமக்களாகிய நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அரசியலில் இறங்கினேன்.
மேலும், அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கு மக்கள் இருக்கும் வரையில்
தாக்குப்பிடிப்பேன். தவிர, மக்களை என் பின்னால் வாருங்கள் என்று அழைக்கமாட்டேன், என்னுடன் சேர்ந்து வாருங்கள் என்று மக்களாகிய உங்களை அழைப்பேன்.
“நாளை நமதே”
நல்ல தமிழகம் நாளை வேண்டுமென்றால், எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். ‘‘நாளை நமதே”.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.என்று கூறினார்.
திருப்பூர் மற்றும் அவிநாசியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு திரண்டு
கமல்ஹாசனின் உரையை கேட்க வருகை புரிந்ததால், அவிநாசி பேருந்து நிலையம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Leave a Reply