BREAKING NEWS

‘மகா முனி‘ – விமர்சனம்

ஆர்யா இரு வேடங்களில் நடித்து இருக்கும் படம் இது.
கூலிக்கு கொலை செய்பவன் ‘மகா‘. .குடும்பஸ்தன். அவனை ஒரு அரசியல்வாதி பயன்படுத்தி தன் குடும்பத்தை இழிவாக பேசிய எதிர் அரசியல்வாதியை கடத்தி வர சொல்கிறான்..மகா வும் கடத்தி வந்து ஒப்படைக்க அந்த அரசியல்வாதி அநியாயமாக கொலை செய்யப்படுகிறார். பழியை தூக்கி மகா மீது போட – போலீஸ் மகாவை தேடுகிறது அரசியல்வாதியும் மகாவை போட்டு தள்ள ஆட்களை ஏவி விடுகிறான். .
‘முனி’ ஆன்மீகவாதி. ஏழை குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டுபவன். அவன் மீது ஆசை கொள்கிறாள், கோடீசுவரரின் மகள். இதை விரும்பாத கோடீசுவரன் முனியை சதி செய்து சாகடிக்க முயல்கிறான்.
மகாவும் முனியும் ஒரே உருவ ஒற்றுமையை கொண்டவர்கள் என்பதால் மகாவுக்கு பதிலாக முனியை கொலை செய்து விட எதிரிகளை மகா பழிக்குபழி வாங்குவது கதை
கொலைகாரன் தான் .ஆனால் ஆலட்டல் உருட்டல் இல்லை. குடும்ப பாரத்தை சுமக்கும் சராசரி மனிதனாக– மனைவிக்கு நல்ல கணவனாக ‘‘ மகா‘ வில் வாழ்ந்திருக்கிறார் ஆர்யா. சம்பவம் நடத்த சென்ற இடத்தில் எதிரிகள் முதுகில் கத்தியால் குத்தி விட முதுகில் சொறுகிய கத்தியுடன் ஆஸ்பத்திக்கு வரும் காட்சியில் இதயத்தை பதற வைத்து இருக்கிறார், ஆர்யா.இப்படியும் ஒரு நல்ல பையனா?‘ என ஏங்க வைக்கும் வகையில் வெள்ளந்தி தனமானது முனி பாத்திரம் – பிரமாதம்.
மகாவுக்கு ஜோடி இந்துஜா.. புருஷன் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்சும் புருஷன் மீது கொள்ளை பாசம் கொண்டு வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அற்புத மனைவியாக அசத்துகிறார் இந்துஜா.
முனியின் மீது நட்புடம் பழகும் கோடீசுவரரின் மகளாக மஹிமா. துடுக்கு நடிப்பிலும் திமிர் தனத்திலும் துள்ளுகிறது மனசு
சாக்கு பைக்குள் நல்ல பாம்பை போட்டு முனி ஆர்யாவை கையை விட்டு எடுக்க சொல்லும் நயவஞ்சகதனத்தில் ஜெயபிரகாஷ் நடிப்பு -கதையில் சரியான திருப்பம்.
கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் சாந்தகுமார். ‘மவுன குரு‘ என்ற வெற்ரிபடத்தை கொடுத்தவர். இக்கதையை எழுத 8 வருஷம் ஆனதாம். ஆனால் கதை அப்படி ஒன்றும் புதுசு இல்லை. எம் ஜி ஆர் காலத்து ‘இரட்டையர்‘ கதை தான். ஆனால் அதை கதையாக காட்சி படுத்தி இருக்கும் விதத்தில் டைரக்டர் தனி கவனம் பெறுகிறார். ஒரு நிஜ சம்பவத்தை நேரில் பார்த்த திருப்தி.அவருக்கு சரியான பக்க பலம் காமிரா மேன் அருள் பத்மநாபன். காடு மேடு காட்சிகளை அழகாக அள்ளி வந்து இருக்கிறது , பாடலை விட பின்னணி இசையில் ஜொலிக்கிரார், இசை அமைப்பாளர்.தமன் .
‘மகா முனி‘ –- ‘மெகா சினி‘‘




Leave a Reply