BREAKING NEWS

மகாத்மாவின் அஸ்தி கடலில் கரைக்கப்பட்ட இடத்தில் சிங்கப்பூரில் காந்தி நினைவுச் சின்னம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு கடலில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.

சிங்கப்பூர் வாழ் இந்தியர்களின் கோரிக்கை அடிப்படையில், மகாத்மா காந்தியின் அஸ்தி, சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு கிலிப்போர்டு பியர் பகுதியில் கடலில் கரைக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட அந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் அந்த நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.




Leave a Reply