BREAKING NEWS

மகராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்.

 

மகராஷ்டிரா மாநிலத்தில் 7-வது ஊதிய கமிஷன் அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

வேலைநிறுத்தம்

மராட்டியத்தில் 7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கவேண்டும், ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் பணி, காலியாக உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அறிவித்தபடி நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எச்சரிக்கை

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 17 லட்சம் பேர் பங்கேற்று உள்ளதாக தெரிவிக்கப் பட்டன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்து இருந்தது.

வாபஸ்

இரண்டரை நாட்களாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர், தலைமைச்செயலாளரை நேற்று சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.




Leave a Reply