BREAKING NEWS

போலீஸ் பாதுகாப்புடன் காலா வெளியானது – தியேட்டர் வெறிச்சோடியது.

உலகம் முழுவதும் நேற்று ரஜினியின் காலா படம் வெளியானது முதல் காட்சியில் இருந்த கூட்டம் அடுத்தடுத்த காட்சிகளில் குறைந்ததால் பல தியேட்டர்கள் வெறிச்சோடியது

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் ரிலீசானது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் நேற்று அதிகாலை வெளியானது. இதில் ரஜினியின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தனர்.

தூத்துக்குடியில் மக்கள் போராடத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த ரஜினிக்கு எதிராக மக்கள் பல இடங்களில் போராட்டம் நடந்தினர். இந்த போராட்டத்தின் தாக்கம் வெளிவந்த காலா படத்தில் எதிரோலித்தது.




Leave a Reply