BREAKING NEWS

போக்குவரத்து விதி மீறல் மசோதாவில் உள்ள 10 அம்சங்கள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான தொகை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தாக்கல் செய்தார்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சட்டத்தின் மீது பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், நுண்ணறிவு போக்குவரத்து முறை மூலம் கண்காணிக்கப்படுவதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என்பதற்காகவும் இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறல் மசோதாவில் உள்ள 10 அம்சங்கள் பின்வருமாறு:-

  1. வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது, டிராபிக் சிக்னலில் நிற்காமல் செல்வது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது போன்றவை குற்றப்பிரிவின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
  2. ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லும் டிரைவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தகுதியில்லாமல் வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
  3. அதிவேகத்தில் செல்லும் டிரைவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும்.
  4. இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிப்பதுடன், 3 மாதங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
  5. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், வாகனத்தின் உரிமையாளர் அல்லது காப்பாளர் குற்றவாளியாக கருதப்பட்டு தண்டிக்கப்படுவார். இது போன்ற குற்றங்களுக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனப்பதிவும் ரத்து செய்யப்படும்.
  6. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாமலும், போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கும் ரூ.500-க்கு பதில் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
  7. காலாவதியான லைசென்ஸ் அல்லது லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். தகுதியில்லாத நபர் வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
  8. ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
  9. வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்.
  10. டிரைவிங் லைசென்ஸ் கம்யூட்டர் மயமாக்கப்படுவற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ஆன்லைன் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என்ற முறை கொண்டு வரப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.



Leave a Reply