தற்போதைய செய்திகள்
tnstc

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? நிதித்துறை செயலாளர் அறிவிப்பு…

சென்னை, ஜன.10-

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு எவ்வளவு என்பதை நிதித்துறை செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘1.1.2006 அன்று பணியில் சேர்ந்த அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஓட்டுநரின் சம்பளத்தினை இணையாக இருக்கும் விதத்தில் 2.44 மடங்கு சம்பள உயர்வை போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு நடைமுறைப்படுத்தியதன் மூலம் இருவருக்கும் ஒரே அளவு சம்பள உயர்வு கிடைத்துள்ளது. அதன் விவரம் பட்டியலுடன் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

——————-

சம்பள விவர பட்டியல் வருமாறு:

வ.
எண் விபரம் அரசு ஊழியர்கள் விபரம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்
சதவீதம் மடங்கு        சதவீதம் மடங்கு
1 1.1.2006
அடிப்படை அளவு 100
1 2007-ல் ஊதிய உயர்வு 15 0.15
2010-ல் ஊதிய உயர்வு 24 0.24
2010-ல் அடிப்படை சம்பள அளவு 100 1.0
2013-ல் ஊதிய உயர்வு 5.5 0.055
மொத்தம் 105.5 1.055
1.1.2016

1) சம்பளத்துடன் இணைக்கப்பட்ட அகவிலைப்படி

125

1.25 2016-ல் மாற்றியமைக்கப்படும் ஊதியம்
(1.055-ல்
2.44 மடங்கு)
2) ஊதிய உயர்வு 32 0.32
257 2.57        257.42 2.5742

* அரசு ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் 1.1.2016 வரை ஊதிய உயர்வு 2.57 மடங்கு. இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு.
* அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2010 முதல் 2016 வரை அதாவது,
6 ஆண்டுகளில் ஊதிய உயர்வு 2.57 மடங்கு.
* தொழிற்சங்கங்கள் கோருவது 2013 முதல் 2016 வரை 3 ஆண்டுகளில் கோரும் சம்பள உயர்வு 2.57 மடங்கு.
1.10.2017 அன்று
1.1.2016-ல் பணி நிரந்தரம் பெற்ற
அரசு ஓட்டுநர் சம்பளம்               – ரூ.33,930/-
போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சம்பளம் – ரூ.34,077/-
Leave a Reply