BREAKING NEWS

பொறியில் படிப்பில் சேர்வதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். மாணவர்களிடம் ஆர்வம் குறைந்தது.

பொறியியல் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 590 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பர் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள 562 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை, கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பி வருகிறது. மொத்தம் உள்ள 2.6 லட்சம் பொறியியல் காலி இடங்களில் 1.9 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த வருடம் முதல், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் நேற்று மாலை 5 வரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

மேலும் 2 லட்சம் இடங்களுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது மத்தியில் பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ்கள் ஜூன் 5 முதல் ஜூன் 14 வரை சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் கலந்தாய்வு கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்ற அறிவிப்பால் கிராமப்புற மாணவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதியப்பட்டாலும் தேவையான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ்கள் வரும் 5 முதல் 14-ந் தேதி வரை சரிபார்க்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இதற்காக 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாள், நேரம் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply