BREAKING NEWS

பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது, இந்தியா உலக அளவில்

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 5-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் 20.49 டிரில்லியன் டாலருடன் அமெரிக்காவும், 2வது இடத்தில் 13.61 டிரில்லியன் டாலருடன் சீனாவும் பிடித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா 5ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதில், 2017-ம் ஆண்டு உலக அளவில் 5-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 2018-ம் ஆண்டு 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 2.65 டிரில்லியன் டாலருடன், உலக அளவில் 5-வது இடத்தில் இருந்த போது, பிரிட்டன் 2.64 டிரில்லியன் டாலருடன் 6வது இடத்திலும், 2.59 டிரில்லியன் டாலர் மதிப்புடன் பிரான்ஸ் 7-வது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டன் 5-வது இடத்திற்கும் பிரான்ஸ் 6-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது. 2017-ம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த இந்தியா உலக பொருளாதார அரங்கில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், முதல் இடத்தில் 20.49 டிரில்லியன் டாலருடன் அமெரிக்காவும், 2வது இடத்தில் 13.61 டிரில்லியன் டாலருடன் சீனாவும் பிடித்துள்ளன. 3வது இடத்தில் 4.97 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜப்பானும், 4வது இடத்தில் 3.99 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜெர்மனியும் உள்ளன.




Leave a Reply