BREAKING NEWS

பொருளாதாரத் தடைகளை நீக்க முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்க வேண்டும்

தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவர முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்குமாறு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ஜி – 7 நாடுகள் சந்திப்பில் ஈரான் அதிபரை சந்திக்க தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்பின் பதிலுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பதிலளித்திருக்கிறார்.இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி தொலைகாட்சியில் பேசும்போது,”முதலில் எங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பி பெறுவதற்கான முதல் அடியை அமெரிக்க எடுத்து வைக்க வேண்டும் ஈரானுக்கு எதிராக விதித்த அனைத்து சட்ட விரோதமான பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும். எனவே ஈரானுடன் நட்புறவை ஏற்படுத்தக் கூடிய சாவி தற்போது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது” என்றார்.

அணுஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இப்படி தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கிய தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. பொதுமக்கள் மக்கள் பலர் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராக தொட்ரந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply