BREAKING NEWS

பேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை பேஸ்புக் துவங்கியது.

 

 

32 போலி அக்கவுண்ட்

பேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள்(17 ப்ரோபைல்கள், 8 பக்கங்கள் மற்றும் 7 இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த குழுவுக்கும் தொடர்பில்லை

நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

தனியுரிமை தகவல்

2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் பேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. பேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் பேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் பேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என பேஸ்புக் தெரிவித்துள்ளது.




Leave a Reply