BREAKING NEWS

பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோர் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றதால் திருநெல்வேலியில் பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் மிக அதிகமாக இருந்தது.தீபாவளி கொண்டாட்டம்இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு வந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

விடுமுறை நிறைவடைந்ததை தொடர்ந்து திங்கள்கிழமை மாலையில் அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கு புறப்பட்டுச் செல்லத்தொடங்கினர். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக 68 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், திங்கள்கிழமை கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு 15, கோவைக்கு 7, திருப்பூருக்கு 5, மதுரை-25 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் திருநெல்வேலி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் சென்றனர். இதுதவிர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூருக்கு ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக சுமார் 15 பேருந்துகள் இயக்கப்பட்டன.

கூடுதல் வசதிகள் தேவைதிருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் மட்டுமே கூடுதலாக இயக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்குச் செய்யவில்லை. குடிநீா்க் குழாய்களில் தண்ணீா் வராமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டதைப் போல திருநெல்வேலியில் கூடுதல் கவுன்ட்டர்கள் உள்ளிட்டவை இல்லை. வழக்கத்தைவிட அதிக பயணிகள் வந்து விசாரணை அலுவலகத்தில் பேருந்து குறித்து விசாரிக்க வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை கால விடுமுறைகள் நிறைவடையும் நாள்களில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசதிக்காக வெந்நீா், நடமாடும் கழிப்பறை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்கள் கோரிக்கைதிருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் திங்கள்கிழமை பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமிருந்தது.

திருநெல்வேலி மார்க்கமாக இயக்கப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், செந்தூர் விரைவு ரயில், அந்தியோதயா ரயில், கன்னியாகுமரி-நிஜாமுதீன் விரைவு ரயில் போன்றவற்றின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க முதியவர்கள், பெண்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைமேடைகளில் காத்திருந்து பயணித்தனர். பண்டிகை காலங்களில் அந்தியோதயா ரயில்களை அதிகம் இயக்கினால் ஏழை-எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென பொதுமக்கள் தெரிவித்தனா்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *