BREAKING NEWS

பெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை  – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம்.

 

 

தமிழகம் முன்னிலை

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.

10 ஆண்டு காலம்

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம்,  பெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் இந்தியாவின் பெருந்தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 10 ஆண்டு காலத்திற்குள் ரூ.4000 கோடி முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது.

அமைச்சர் எம்.சி.சம்பத்

இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (5.7.2018) சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசு சார்பில் தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், சியட் நிறுவனத்தின் சார்பில் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனந்த் கோயங்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Leave a Reply