BREAKING NEWS

பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது திருவுருவ படமும் வைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டை யன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், செய்தித்துறை இயக்குனர் சங்கர், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை கழக நிர்வாகிகள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, கமலக்கண்ணன், பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்யா, தேனாம்பேட்டை முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், மணி, ஸ்டெர்லிங் ஜார்ஜ், முருகேசன், முகப்பேர் இளஞ்செழியன், மாணவரணி மாவட்ட செயலாளர் எம். ராமலிங்கம் பிராட்வே இளங்கோ, மீனவரணி நீலகண்டன், காரம்பாக்கம் லியோ சுந்தரம், பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *