தற்போதைய செய்திகள்

பெயர் மாற்றம் தண்ணீர் தராது அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பெயர் மாற்றம் தண்ணீர் தராது
அன்புமணி ராமதாஸ் அறிக்கை
 

சென்னை, மே 17-

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.

இப்படி எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி விட்டு, அதற்கு பெயரை மட்டும் கவர்ச்சிகரமாக சூட்டினால் என்ன பயன்? புதிய அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் சூட்டினால் மட்டும் காவிரி நீர் வந்து விடாது.

எனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்குக் குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்சநீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.




Leave a Reply