BREAKING NEWS

பெட்ரோல் விலை மும்பையில் ரூ.90-ஐ நெருங்கியது

 

 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ச் சியாக அதிகரித்து வருகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.90 ஐ நெருங்கி யுள்ளது. 2 நாட்களுக்கு முன்புள்ள நிலவரப்படி புதுடெல்லியில் பெட்ரோல் விலை ரூ.80.87 ஆகவும், டீசல் விலை ரூ.72.97 ஆகவும் விற் பனையானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் இரண்டு எரிபொருளும் 14 பைசா அதிகரித்தது. இதற் கிடையே மும்பையில் பெட்ரோல் விலை ரூ.88.26 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ.77.47 ஆக இருந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 வீதம் வரியை குறைப்பதாக ஆந்திர பிரதேச அரசு திங்கள் கிழமை அறிவித் துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர பிரதேசம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.




Leave a Reply